Tamil
QoTD
வாழ்வு - பாரதிதாசன் பாடல்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
அச்சம் தவிர்ந்தது - நல்
லன்பின் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவரேனும் - அவர்
மானத்தின் வாழ்வது வாழ்வு!
உச்சி மலை விளக்காக - உல
கோங்கும் புகழ் கொண்ட தான
பச்சைப் பசுந் தமிழ் நாட்டில் - தமிழ்
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!
மூதறிவுள்ளது வாழ்வு - நறும்
முத்தமிழ் கற்பது வாழ்வு!
காதினில் கேட்டதைக் கண்ணின் - முன்
கண்டதை ஓவியம் ஆக்கும்
பாதித் தொழில் செயலின்றி - உளம்
பாய்ச்சும் கருத்திலும் செய்கை
யாதிலும் தன்னை விளக்கும் - கலை
இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு!
ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி
அன்னவர் காலிடை வீழ்ந்து
நாய்களைப் போல் தமக்குள்ளே - சண்டை
நாளும் வளர்க்கும் மதங்கள்
தூயனவாம் என்று நம்பி - பல
தொல்லை யடைகுவ தின்றி
நீ எனல் நானெனல் ஒன்றே - என்ற
நெஞ்சில் விளைவது வாழ்வு
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search