Tamil

QoTD

All that water in the sea can not sink a ship unless it gets inside. Likewise, negativity of the world is safe as long as it stays outside.

கடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் அது உட்புகாத வரை கப்பலை கவிழ்க்க இயலாது. அதே போல உலகின் அனைத்து எதிர்மறை சிந்தனைகளும் உட்புகாத வரை மனிதனை கவிழ்க்க இயலாது.

ராவணன் திரைப்பட அனுபவம்


Udayakumar Nalinasekaren
Dec 20, 2010

ராவணன்ஜூலை 11, 2010 - வீரப்பன் போல் ஒர் மனிதனை ராவணனாகவும், காவல் துறை மேற்பார்வை அதிகாரி (SP) ஒருவரை ராமனாகவும், அவர் மனைவியை சீதையாகவும், ஊறுகாய் கடிக்க கார்த்திக் போல ஒருவரை அனுமானாகவும் யோசித்தீர்களானால் 'ராவணன்' கதை உங்களுக்குப் புரிந்து விடும்.

சுஹாஸினி வசனம் எழுதியிருக்கிறார். பொதிகையில் மெகாதொடர் பார்த்து விட்டு எழுதியிருப்பார் போலும். கதாபாத்திரங்கள் 'ஷாட்'டுக்குள் வரவேண்டும் என்று நீள வசனங்களை அவசர அவசரமாகப் பேசுகிறார்கள் என்று தோன்றியது. சில காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை. பல இடங்களில் ஒரே கூச்சல்.

'அய்ஷ்' சீதையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். வரவில்லை பாவம். ஒரு காட்சியில் அவரே 'நான் தைரியமாக இருப்பதாக நடிக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை' என்ற பாணியில் வசனமே பேசியிருக்கிறார். அந்த வசனத்தை மட்டும் முழுவதுமாக உணர்ந்து நடித்திருக்கிறார். பொம்மை போல் வந்து கண்களை அசைத்து விட்டுப் போகும் காட்சிகளில் அருமையாகச் செய்திருக்கிறார். 'சீ சென்டர்' ரசிகர்களுக்கும் வஞ்சகமில்லாமல் நடித்துப் போயிருக்கிறார்.

ராவணன் சீதையை ஆதாரக் கதையில் வருவது போல இங்கே அவள் மேல் ஆசைப் பட்டுத் தூக்கி வரவில்லை. கடத்திய காரணத்தை இடைவேளைக்கு அப்புறம் ப்ரியாமணி உதவியுடன் சொல்கிறார்கள். அதனாலேயே படம் வெறும் காட்சிகளாகத்தான் வெகுநேரம் நகர்கிறது. ப்ரியாமணியை சூர்பணகையாகப் பார்க்க மனசு கேட்க மாட்டேனென்கிறது. அழகான பெண். சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படப் பிடிப்பு அருமை. 'வீரா' பாட்டு இசைவாக இருந்தது. பள்ளத்தாக்கின் மேல் கயிற்றுப் பாலத்தில் சண்டை போடுவதை அருமையாகப் படமாக்கி இருக்கிறார்கள். போலிஸ் ராமர் தன் சீதையிடம் ரயிலில் பேசும் வசனம் பல தமிழ் அம்மணிகளுக்குப் பிடித்திருக்காது. மொத்தத்தில் போர் அடிக்காமல் இரண்டு மணி நேரம் போயிற்று. மற்றபடி பெரிதாகச் சொல்லும் படி வேறு ஒன்றும் இல்லை.


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch