Tamil
QoTD
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
அண்மையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் கீதத்தில், இந்தப் இடுகையின் தலைப்பில் உள்ள வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை நக்கீரனார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள். சங்கத் தமிழ்.
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பம் எனினே, தப்பு ந பலவே.
கடல் சூழ்ந்த உலகம் தனது பொறுப்பின் கீழ் வரவேன்டும் என்று துடிக்கிற வேந்தருக்கும், இரவு பகல் தூங்காமல் காட்டில் வேட்டையாடித் திரிகிற கல்வி அறிவில்லா முரட்டு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவைகள் இரண்டே. பசியைப் போக்க ஒரு நாழித் தானியம் மற்றும் மேலும் கீழும் உடுத்த இரண்டு உடை. இப்படி உலகில் உள்ள மாந்தருக்கெல்லாம் தேவை ஒன்றாக இருக்கும் போது, சேர்க்கும் செல்வத்தை சமூக வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் மெத்தைக்குள் தைத்து வைத்துக் கொண்டு தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை பல இன்னல்களைத் தரும்.
சமூக வளர்ச்சிக்கு செலவு செய்து, இருக்கும் செல்வத்தையும் பெருக்கி, தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பவன் கையில் செல்வம் சேருவது உத்தமம்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search