Tamil

QoTD

Art only begins when you are full.
மனிதன் நிறை பெற்ற பிறகுதான் அவனுக்குள் கலை ஆரம்பிக்கிறது.

உலகமே ஒரு விளையாட்டு !


Udayakumar Nalinasekaren
Jan 01, 2011

தமிழ் செம்மொழிகடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடியிருக்கும் சித்தர் பாடலில் இருந்து ஒரு பகுதி

தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவில்
   தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
   வயது தெரிந்ததுவும் விளையாட்டே

பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை
   பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த
   வையகத்து இருப்பதுவும் விளையாட்டே

பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்
   பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்
   காசுவட்டி போடுவதும் விளையாட்டே

மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
   மனைவிமக்கள் என்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே- இச்
   செகத்திற் திரிவதுவும் விளையாட்டே

ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வேத
   ஆகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே- உற்றார்
   கூடி மகிழப் பேசுவதும் விளையாட்டே

பிணமா யிருப்பதுவும் விளையாட்டே- அதைப்
   பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்
   கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே

செத்தோர்க்கு அழுவதுவும் விளையாட்டே- சுடலை
   சேரும் வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம்  பேசுவதும் விளையாட்டே - குளித்து
   வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே

வீணாள் கழிவதுவும் விளையாட்டே - சுடலை
   சேரும் வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம்  பேசுவதும் விளையாட்டே - குளித்து
   வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே

கனவுநினைவு என்பதுவும் விளையாட்டே - இக்
   காசினியோர் உழல்வதும் விளையாட்டே
நினைவாய்ச்செய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க
   நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே

பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்
   பின்னால் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல
   வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே

சீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன்
   சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொலவதும் விளையாட்டே - நெஞ்சில்
   நினைக்காமற் செய்வதுவும் விளையாட்டே

பந்துசனம் என்பதெல்லாம் விளையாட்டே - லோகப்
   பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே- இதைச்
   சொப்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே

யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே - அதன்
   உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே - ஒருவர்
   தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே

கோடிப்பணந் தேடுவதும் விளையாட்டே - அதைக்
   குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே - மனந்
   தேறுதலாய் திரிவதும் விளையாட்டே ...

என்று இன்னமும் மேலே போய்க்கொண்டிருக்கிறது இந்த சித்தர் பாடல்


About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch