Tamil
QoTD
தகுதி தேவையில்லாமல் கிடைப்பவை
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா - துள்ளிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு
பொருள்:
நெருங்கிய இலைகளை உடைய மரத்தின் நிழலைப் பெற அதன் கீழே இருந்தால் போதும். அது போல மன்னர்களிடம் உதவி பெறுவதற்கும், மகளிர் அழகைப் பார்ப்பதற்கும் அவர்கள் அருகில் இருப்பதைத் தவிர வேறு தகுதி தேவையில்லை
நாலடியார் பாடல்: பெரியாரைப் பகையாமை
இதைப் படித்து விட்டு உதைக்க வரும் மகளிர், சற்று உட்பொருளையும் அறிய வேண்டும். இந்தப் பாடல் பெரியாரைப் பகையாமை என்ற தலைப்பில் வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. மேற்சொன்ன சூழல்களில் பகை வராமல் இருக்க வேண்டும் என்றால் சும்மாயிருக்க வேண்டும். தேவையில்லாமல் எந்தத் தகுதியையும் வெளிக்காட்டி வாங்கிக் கட்டிக் கொள்ளாதே என்று புலவர் சொல்வது போல் எனக்குத் தோன்றுகிறது
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search