Tamil
QoTD
சொர்க்கமும் நரகமும்
Udayakumar Nalinasekaren
Sep 18, 2014
ஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். சாமுராய் வீரர் துறவியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று சொன்னார். துறவி புன்னகையுடன் தலையசைத்தார். சாமுராய் வீரர் "ஐயா எனக்கு சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் வித்தியாசம் தெரியப் படுத்துங்கள்" என்றார்.
துறவி பதிலேதும் சொல்லாமல் புன்சிரித்துக் கொண்டிருந்தார். சாமுராய்க்கு தலைக்கு மேல் கோபம் வந்து விட்டது. தனது சாமுராய் வாளை உறுவிக்கொண்டு "உன்னை மதித்துக் கேள்வி கேட்பவனை அவமதிப்பாயா?" என்று உறுமினார். துறவி புன்னகை மாறாமல் "இப்போது நீர் நரகத்தில் இருக்கிறீர்" என்றார்.
இதைக் கேட்ட சாமுராய் சற்றே தெளிவு பெற்றவராய் உடனே பின் வாங்கினார். துறவியைப் பணிந்து வணங்கி "ஐயா, அறியாமல் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று சொன்னார். இப்போதும் அதே புன்னகையுடன் துறவி சொன்னார் "நீர் இப்போது சொர்க்கத்து வந்து விட்டீர்".
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search