Tamil
QoTD
ஷில்பா ஷெட்டியின் அந்தர் பல்டி !!
Udayakumar Nalinasekaren
Jan 19, 2007
இன்று நாட்டை உலுக்கும் இரண்டு மிகப் பெரிய விவகாரங்களில் ஒன்று ஷில்பா விவகாரம். மூன்று கோடி ஒப்பந்தம் போட்டு லண்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு போனாராம். அங்கே நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளர்கள் சிலர் ஜேட் கு·டி என்பவர் தலைமையில் இன அடிப்படையில் இவரை அவமானப் படுத்தி விட்டார்களாம். நாடே கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது.
யோசித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சினையால் சிலருக்கு பலத்த ஆதாயம் இருக்கிறது
- நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்திற்கு இலவச விளம்பரம்
- குறுஞ்செய்தி (SMS) மற்றும் தொலைபேசி மூலம் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியானதால் அதிக வாக்காளர்கள் பங்கேற்பதன் மூலம் ப்ரிட்டிஷ் தொலைபேசி நிறுவனங்கள் பூரிப்புடன் தத்தம் வங்கிகளுக்கு வருமானத்தை அள்ளிச் செல்வார்கள்
- ஷில்பா ஷெட்டிக்குக் கிடைக்கக் கூடிய அனுதாப அலையால் அவர் நிகழ்ச்சி வாக்கெடுப்பில் கண்டபடி முன்னேற வாய்ப்பு. அதற்கு மேல் அவரைப் பற்றி உலகில் மேலும் பல பேருக்குத் தெரியப் போவதால் கிடைக்கக் கூடிய தனி நபர் ஆதாயம்
- ஜேட் கு·டி ஒரு வாசனைத் திரவிய வியாபாரி. அவரது விற்பனைப் பொருளின் பெயர் 'Shh'. இது வரை எனக்குத் தெரியாது. இந்தப் பிரச்சினையால் இப்போது தெரியும். என்னைப் போல எத்தனையோ இந்தியர்களுக்கும் இது இலவச விளம்பரம். ஜேட் கு·டி இந்தியாவில் விற்பனை ஆரம்பிக்க நல்ல மார்க்கெட்டிங் யுத்தி
'Carphone Warehouse' என்ற விளம்பர நிறுவனம் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். யோசிக்காமல் காலை விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.
வியாபார நிறுவனம் நடத்தும் திறமையுள்ள ஜேட் கு·டி, யுக்தியில்லாமல் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி.
இதில் நடுவே இந்திய சுற்றுலா வளர்ச்சித் துறை பிரிட்டனில் முழுப் பக்க விளம்பரம் செய்திருக்கிறார்களாம். அதுவும் எப்படி? ஜேட் கு·டி இந்தியாவிற்கு வந்தால்தான் அவருக்கு இந்தியாவின் பெருமைகள் தெரியும். மற்றும் அவருக்கு தற்போது சற்று 'டென்ஸன்' ஆக இருப்பதால், இந்தியாவில் மன அமைதி கிடைப்பது நிச்சயம் என்று அவருக்குத் தனிப்பட்ட அழைப்புடன் ஒரு முழுப்பக்க விளம்பரம்.
அட!! நம்ம அரசு எப்போருந்துங்க இவ்வளவு சமத்தா மாறினாங்க?
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search