Tamil
QoTD
தலைமைப் பண்புகள் - அடுத்தவரை புரிந்து கொள்வது - வள்ளுவர் வாக்கு
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
தலைமைப் பொறுப்பில் (Leadership position) இருப்பவன் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி வள்ளுவர் அறிந்து சொல்லியிருக்கிறார். எந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டாலும் வள்ளுவர் வாக்கு அங்கே நிற்பதை அறிய முடிகிறது!
உதாரணத்திற்கு "புலன் ஆய்ந்து கேட்கும்" (Listening with senses) திறமை பற்றி சில நாட்களுக்கு முன்னர் எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். வள்ளுவரின் வாக்கில் அதைப் பற்றிய சில கருத்துக்கள் கீழே:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி
பொருள்:
பேசும் வார்த்தைகள் தேவையில்லாமல் அடுத்தவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொள்பவர் கடல் சூழ்ந்த இந்த உலகத்திற்கு அணிகலன் போன்றவர்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
பொருள்:
பக்கத்தில் இருப்பதைப் பிரதிபலித்துக் காட்டும் பளிங்குக் கல் போல் ஒருவர் மனத்தில் இருக்கும் கடுமையையோ இன்மையையோ முகம் பிரதிபலித்துக் காட்டி விடும்.
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின்
பொருள்:
ஒருவரின் கண்ணின் மூலம் மனதைப் படிக்கத் தெரிந்தவருக்கு எதிரில் நிற்பவர் பகைவரா நண்பரா என்று அவர்தம் கண்ணைப் பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.
அதிகாரம் 71: குறிப்பறிதல்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search