Tamil
QoTD
பிழை பொறுத்தல் - உண்மையான நட்பின் தன்மை
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான் நோவின் அல்லது - துள்ளிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானகநாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது
பொருள்:
காடுகளை உடைய நாட்டின் வேந்தனே, காட்டு மிருகங்களே ஒருவருடன் நன்கு பழகிய பின்னர் அவரிடமிருந்து பிரியாமல் பொறுத்துக் கொள்ளும் போது, மனிதனால் மட்டும் பழகிய நண்பன் தீமை செய்தால் ஏன் பழைய நட்பின் நினைவுடன் பொறுமை (தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டிய போதும்) காக்க முடியாது?
நாலடியார் பாடல்: பொறையுடைமை
இந்தக் காலத்திற்கு இது கொஞ்சம் 'உடோபியா' என்றாலும் ஒரு தலைவனுக்கு இது இன்னமும் பொருந்தும் அறிவுரை. தளபதி திரைப்படத்தில் ரஜினியின் 'ஏன்னா நீ என் நண்பன்' வசனம் நினைவுக்கு வருகிறது.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search