Tamil
QoTD
பச்சைக் காற்றே வீசு
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
எளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல்.
பச்சைக் காற்றே வீசு, பன்னீர் வார்த்தை பேசு
காலைப் பூவே மாலை போடு
தேவை கண்டு தேன் கொடு
துள்ளும் மேகம் தூறல் போடு
சொல்லும் போது போய் விடு
ஊர்களை மாற்றி பிறந்திருந்தாலும் உடல்களுக்குள்ளே மதமில்லை
பேர்களை மாற்றி நீ அழைத்தாலும் கடல்களுக்குள்ளே சுவரில்லை
காட்டின் ஓடை எந்த நதியிலும் சேர்ந்து விடும்
காதல் பாடல் எந்த சுதியிலும் சேர்ந்து விடும்
இது சரியென்றும் தவறென்றும் யார் சொல்வது
நேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை
வளைகின்ற நதியில் அழ கதிகம்
வாழ்க்கையும் கூட வளைகின்ற நதிதான்
திருப்பத்தில் தானே ருசி அதிகம்
உந்தன் பின்னால் எந்த வாழ்க்கையும் வருவதில்லை
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை யில்லை
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search