Tamil
QoTD
பாப்பி மலர்கள்
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
நவம்பர் 1, 2010 - இன்று லண்டனில் நிறையப் பேர் சட்டையில் ஒற்றை பாப்பி மலர் அணிந்திருந்தார்கள். போர் வீரர்கள் சிலைகளுக்குக் கீழே பாப்பி மலர் கொத்துக்கள் இருந்தன.
நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது அவர் போர்க்காலத்தில் நடந்த வரலாற்றைச் சொன்னார். போர் முடிந்த உடன் இங்கிலாந்தில் வந்து பார்த்தால் நாட்டில் எல்லாமே அழிந்து போயிருந்தனவாம். ஆனால் பாப்பி மலர்கள் மற்றும் அழியாமல் பூத்துக் கிடந்தனவாம்.
ஆகவே பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் அடையாளமாக பாப்பி மலர்களை அவை மலரும் காலத்தில் (நவம்பர் முதல் மார்ச் வரை) அணிகிறார்கள் என்பது இன்று கேட்ட சுவாரசியமான் கதை.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search