Tamil
QoTD
நாலடியார் பாடல் - எது பெருமை?
Udayakumar Nalinasekaren
Dec 26, 2010
இசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவார் கண்
பகையேயும் பாடு பெறும்
- நாலடியார் -
நற்பண்பில்லாதவனை சிறுமைக் குணம் கொண்டவன் என்றும் கீழ்மகன் என்றும் சித்தரிக்கிறது நாலடியார் பாடல். சிறுமைக் குணம் கொண்டவனுடன் கொண்ட நட்பு துன்பத்தைக் கொடுக்கும் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வெண்பா அதன் இரண்டாம் பாதியில் வேறு கருத்தைச் சொல்கிறது.
நற்பண்பில் இருந்து விலகி மற்றவர்கள் சிரிக்குமாறு நடந்து கொள்ள விரும்பாதவனை 'மேன்மக்கள்' வகையில் சித்தரித்து, அப்படியானவனிடம் சண்டை போடுவது கூட ஒருவனுக்குப் பெருமைதான் தரும் என்று வெண்பா சொல்கிறது.
"அவர் எவ்வளவு வல்லவர், நல்லவர். அவரையே ஒருவன் எதிர்க்கிறான் என்றால் அவனிடம் ஏதோ சரக்கு இருக்க வேண்டும்" என்பது மனோதத்துவமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
வள்ளுவர் கூட
பேதை பெருங்கெழிஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்
- திருக்குறள் : 810
என்று இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
இந்த வெண்பாவிலும் குறளிலும் சில உள்குத்துக்கள் இருப்பது புலப்படுகிறது
- எந்தப் பெரிய மனிதனும் வலியச் சண்டைக்கு வரமாட்டான். வந்தால் தன்னை இடைநிலைக்குத் தாழ்த்திக் கொள்ளும் அபாயம் அவனுக்கு இருக்கிறது
- யாரேனும் நம்முடன் சண்டைக்கு வந்தால் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, அதாவது பெருந்தன்மையுடன் ஒதுங்கும் பட்சத்தில்
- எந்தச் சண்டையையும் நாம் ஆரம்பிக்கக் கூடாது
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search