Tamil
QoTD
நாட்டியல் நாட்டுவோம் !
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
ஆகஸ்ட் 15, 2010 - பாரதிதாசன் நாட்டியல் நாட்டுவோம் பாடலில் இருந்து ஒரு பகுதி
தென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்?
நாவலந் தீவென நவிலுவார் கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்
செவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே
எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்
நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்?
பழைய நம் தீவில் மொழி, இனம்பல உள,
மொழியின்று கல்வி முளைத்து
இந்நாட்டில் கணக்காயர்களைக்
கலைஞரை, கவிஞரைத் தலைவரைப், புலவரை
விஞ்ஞானிகளை விளைத்தது ஆயினும்
கற்றவர், கல்லாரிடத்தும் கல்வியைப்
பரப்ப முயலவில்லை பாழிருள்
விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்
கற்றவர் சிலர் கல்லாதவர் பலர்
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம்
என்பது கற்றவர் எண்ணம் போலும்
எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர்
எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே ...
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search