Tamil
QoTD
மென்மை என்றால் பலகீனமில்லை
Udayakumar Nalinasekaren
Feb 19, 2011
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது
நெட்டிருப்பாரைக்கு நெக்குவிடா பாறை
பசுமரத்து வேருக்கு நெக்குவிடும்
- அவ்வையார்
பொருள்:
கடினமானவை மென்மையானவற்றை வெல்வதில்லை. உதாரணத்திற்கு யானைக்குள் ஊடுருவக் கூடிய வேல் கம்பு பஞ்சுப் பொதிக்குள் பாயாது. இரும்புக் கடப்பாரைக் கோலுக்கு அசைந்து கொடுக்காத கல் பாறை ஒரு சாதாரண மரத்தின் வேர் ஊடுருவ வழிவிடும்.
நம் ஒட்டு!
கடுஞ் சொல் பேசி மென்மையாக அழுத்தம் திருத்தமாகப் பேசக் கூடியவரை வெல்ல முடியாது
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search