Tamil
QoTD
கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே!
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
பகவத் கீதை சொல்லும் அறிவுரை "கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே!"
Karmanye Vaadhika-raste,
Maa Phaleshu Kadachana;
Maa karma-phala-hetur-bhoorma,
MaTe sangostwakarmini.
कर्मणये वाधिकारस्ते मां फलेषु कदाचन । मां कर्मफलहेतुर्भू: मांते संङगोस्त्वकर्मणि ।।
Bhagavad Gita, Chapter II, Verse 47.
நடைமுறையில் கடைப் பிடிக்க முடியுமா? கடினம் என்றே சொல்ல வேண்டும். விழிப்பு இருந்தால் தன்னைத் தானே ஆராய முடியும்.
இந்த அறிவுரையை எனது தகப்பனார் எனக்குச் சிறு வயதில் பல தருணங்களில் நினைவு படுத்தி இருக்கிறார். ஆனாலும் சில வருடங்களுக்கு முன்னர் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எனக்குத் தலைமை பண்புகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர் (leadership coach) முதல் முறையாக என்னைப் பார்த்த போது "நீ பாராட்டுக்கு ஏங்குபவன் போல் தெரிகிறது" என்றார். முன் பின் தெரியாத ஒருவர் அப்படிச் சொன்னது சுருக்கென்று தைத்தது. அறிவுரை செயலில் இருந்திருந்தால் அப்படி உணர்ந்திருக்க மாட்டேன். பாராட்டுக்கு ஏங்குபவன் தலைமைப் பொறுப்பைச் சரியான படி செய்ய இயலாது என்பது அவர் கூறிய கருத்து. அந்தக் கருத்து பிற்பால் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
விழிப்புடன் செயல் படும் போது, உணர்வுகளை முதலில் அறிந்து கொள்ள முடியும். கூடவே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
செய்யும் காரியங்களுக்குப் பலன் இருந்தால் அது நாளடைவில் தானே வந்து சேரும். பலனைத் தேடிப் போய்க் கொண்டிருந்தால் செய்ய வேண்டிய காரியத்தை உருப்படியாகச் செய்ய இயலாது.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search