Tamil
QoTD
கல்வியின் தன்மை
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
"வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ"
- பொருள்:
வெள்ளம் கொண்டு போக இயலாது. நெருப்பால் வெந்து போகாது, யாராலும் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்றவருக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது கூடும் தன்மை கொண்டது. திருடர்களால் பறித்துக் கொள்ள இயலாதது. இதைக் காவல் காப்பது மிகவும் எளிது. இத்தனை அருமைகள் பெற்ற கல்விச் செல்வம் இருக்க பொருட் செல்வத்தைத் தேடி உலகெங்கும் அலைவதேன்?
இதைப் படிக்கும் போதெல்லாம் நமக்குத் தோன்றுவது:
அந்தக் காலத்தில் மன்னரிடம் கல்வியறிவைக் காட்டினால் பசியாறலாம், அரண்மனை விருந்தினராகத் தங்கிக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் கல்வி கற்று பட்டம் பெற்ற பின்பும் பொருள் தேடி அலையவில்லை என்றால் பெண் கொடுக்க மாட்டார்கள் அம்மா!
இன்று எல்லாமே 'சப்ளை' / 'டிமாண்ட்' பிரச்சினை!!
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search