Tamil
QoTD
இயற்கைத் தெரிவு
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
சார்லஸ் 1859 ஆம் வருடம் உலகிற்கு அறிமுகப் படுத்திய பதம் "இயற்கைத் தெரிவு" (Natural Selection). சூழ்நிலைக்குப் பொருந்தும் உயிரினங்களே உலகில் பிழைத்திருக்கும் என்பது அவர் கொடுத்த தத்துவம். புத்தியுள்ள உயிரினங்கள் பிழைப்பதற்குத் வழிதரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்திக் கொள்ளும். அப்படிச் செய்ய முடியாத உயிரினங்கள் அழிந்து போகும்.
இங்கிலாந்து நாட்டில் ஒரு காலத்தில் ஆந்துப் பூச்சிகள் (Moth) இருவகையான வண்ணங்களில் இருந்தன. ஒரு வகை மிகவும் அடர்த்தியான கருமை நிறம் கொண்டது. மற்றது கருமை குறைவானதால் பளிச்சென்று தெரியக் கூடியது. இங்கிலாந்தில் தொழில் புரட்சி நடந்த போது மரங்களின் மேல் அடர்ந்த கரிப் புகை படர்ந்தது. இது கருநிற ஆந்துப் பூச்சிகளுக்கு இரை தேடும் பறவைகளிடமிருந்து பகல் நேரத்தில் கூட மறைந்திருந்து பிழைத்துக் கொள்ள வழி செய்தது. காலப் போக்கில் ஆழ் கரு நிற ஆந்துப் பூச்சிகளே பிழைத்து உயிர் வாழ்ந்தன. மற்ற நிற ஆந்துப் பூச்சிகள் அழிந்து போயின. இன்னமும் சொல்லப் போனால் பெண் ஆந்துப் பூச்சிகள் 'கலர்' பார்த்து 'ரூட்' போடத் தேடினாலும் கலரான ஆந்துப் பூச்சிகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
தமிழ் நாட்டில் மனித இனம் ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்க :
வண்ணம் பார்க்கிறது, எண்ணம் பார்ப்பதில்லை, பணம் பார்க்கிறது குணம் பார்ப்பதில்லை, இனம் (ஜாதி) பார்க்கிறது மனம் பார்ப்பதில்லை, பதக்கம் (சமுதாய அந்தஸ்து) பார்க்கிறது ஒழுக்கம் பார்ப்பதில்லை !!
(அட! நம்ம கூட கவிதை "அட்டெம்ப்ட்" செய்யலாம் போல் இருக்கிறதே!!)
ஒட்டு மொத்தத்தில் பிழைத்துக் கிடக்கும் வழிக்கான எதையும் இங்கே யோசிப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பதெல்லாம் செயற்கைத் தெரிவாகத்தான் புலப்படுகிறது.
மரபணு (gene) சுயநலம் பிடித்தது. அது மனித இனம் பிழைத்திருக்கும் வழிக்குத்தான் அவர்களைச் செலுத்தும் என்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search