Tamil
QoTD
இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா
Udayakumar Nalinasekaren
Jul 19, 2019
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா – பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்….
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா – பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்
உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வை கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும் –பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்…
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா – பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்
உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்க
பாலும் பழமும் தினம் தேடித்தரும் –பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா – பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்
மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை
புகழ்ந்தே பாடல் புனைந்து விடும் – பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்….
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா – பொருள்
இருந்தால் வந்து கூடும் – அதை
இழந்தால் விலகி ஓடும்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search