Tamil
QoTD
இனிமையும் கடுமையும்
Udayakumar Nalinasekaren
Dec 30, 2010
வெங்காரம் என்ற மருந்து உப்பை உபயோகிக்கும் போது மிகவும் துன்பம் தரும். ஆனால் அது நோயைப் போக்கி நன்மை தரும். சிங்கி எனப்படும் (இது Arsenic என்றும் ஒரு வகைக் காயில் இருந்து எடுக்கும் விஷம் என்றும் இரண்டு வேறு பொருள் தமிழ் அகராதியில் கிடைத்தது) விஷம் உபயோகிக்கும் போது உடலுக்குச் சுகமான குளிர்வைத் தரும். ஆனால் உயிரை மாய்த்து விடும். அதே போல நமக்கு எப்போதும் நல்லது நினைப்பவர்கள் கடிந்து வன்மையாகப் பேசினாலும் அது இனிமையான பேச்சு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்குத் தீமை நினைப்பவர்கள் தேனொழுகப் பேசினாலும் அது வன்மையான நோக்கமுடையதாக இருப்பதால் அதுவும் கடும் சொல் என்று கவனம் வைக்க வேண்டும்! மயங்கி விடக் கூடாது.
இனியவர் என்சொலினும் இன்சொல்லே, இன்னார்
கனியும் மொழியும் கடுவே - அனல் கொளுத்தும்
வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும் மெய்பொடிப்பச்
சிங்கி குளிர்ந்து கொலும்.
நீதிநெறி விளக்கம்
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search