Tamil
QoTD
இந்தியக் குடியரசு தினம் - 26 ஜனவரி 2011
Udayakumar Nalinasekaren
Feb 13, 2011
இன்று கொடியேற்றி இந்தியக் குடியரசின் பழம் பெருமைகளையும் பழைய தலைவர்களின் வீர தீரச் செயல்களையும் பற்றி அசை போட்டுப் பறைசாற்ற இருக்கும் மக்கள் கவனத்திற்கு:
மற்றவர் செய்ததைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு, வாழ்க்கையை நேர்வழியில் நடத்த உதவக் கூடிய (பின்வரும்) சில எளிய சிந்தனைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு, நாம் ஒவ்வொருவரும் அவ்வழியில் ஒரு முன்மாதிரியாக நடக்க உறுதி எடுத்துக் கொண்டு இந்த நாளை எதிர்கால இந்தியாவிற்கு ஒரு பொன் நாளாக அமைப்போம்.
- நல்ல உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து, நிதமும் உடற்பயிற்சி செய்து, விளையாட்டுகள் பல விளையாடி, உற்சாகமாகச் செயல் படுவேன்
- எழுதப் படிக்கக் கற்றுக் கொள்வேன். கற்றுக் கொள்வதை எந்த வயதிலும் நிறுத்த மாட்டேன்
- குழந்தைகள் கல்வி மேம்பட என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்
- பெண் விடுதலைக்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் என்னால் இயன்ற வரை பாடுபடுவேன்
- எனக்குத் தரமாகக் கிடைக்கும் பொதுச் சொத்துக்களை எல்லாம் அடுத்தவரும் அதே உயர்ந்த தரத்துடன் உபயோகிக்கக் கூடிய வண்ணம் விட்டுச் செல்ல முயற்சிப்பேன்
- என் வீட்டையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்
இந்த மாற்றங்களை உருப்படியாக வழிநடத்தி ஒரு முன்மாதிரியாக நடந்து கொண்டால் போதும். ஏற்றம் மிகுந்த இந்தியாவை எவரும் கையில் பிடிக்க இயலாது. இன்னும் பழைய பெருமைகள் விளைவுக்காகப் பேசுவதால் கிடைக்கப் போகும் பலன் ஏதுவும் இல்லை.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search