Tamil
QoTD
'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?
Udayakumar Nalinasekaren
Dec 19, 2010
முதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?
'ஆந்த்ரப்ரெனர்' என்பவர் தன்னையும், தன் நேரத்தையும், யோசனைகளையும், உழைப்பையும் தன் வசம் வைத்திருப்பவர். சமூகத்திற்குப் பயனுள்ள வேலைகள் செய்து பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர். புதிய பாதைகளைக் கண்டுபிடிப்பவர். தொழிலுக்குச் சம்பளம் என்று யோசிக்காதவர். லாபத்தைப் பெருக்கி அதைப் புதிய வழிகளில் எப்படிச் செலவு செய்யலாம் என்று யோசிப்பவர்.
வாழ்க்கையின் தேவைகளால் தளர்ந்து போகாதவரும், வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் வேகம் உள்ளவரும் 'ஆந்த்ரப்ரெனர்' ஆகும் வாய்ப்புகள் அதிகம். 1980 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்படிப் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறார்கள்.
இந்த ஆங்கில வார்த்தைக்குத் தமிழ்ப் பதம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் இதைப் பற்றித் தமிழர்கள் பழங்காலத்தில் யோசிக்கவே இல்லையா?
இணையத்தில் தேடிய போது 'entrepreneur' என்ற சொல்லுக்குக் கிடைத்த தமிழ்ச் சொல் 'தொழில் முனைவர்'.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search