Tamil
QoTD
ஏன் தலை நரைக்கவில்லை
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
"ஆண்டு பலவாக நரையிலவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழும் ஊரே"
- பிசிராந்தையார்
பொருள்:
உமக்கு ஏன் தலை நரைக்கவில்லை என்று மக்கள் கேட்டதற்கு பிசிராந்தையார் என்பவர் கூறிய பதில் இது.
"ஆண்டுகள் பல சென்றும் என்னிடம் நரையில்லையே என்று கேட்டால், என் மனைவி அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்குகிறார். எனது மக்களும் நல்ல குணங்களுடன் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். எங்கள் மன்னன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிபவன். அவன் தலைமையில் இளைஞர்கள் அனைவரும் நல்வழியில் பொறுப்புடன் செல்கின்றனர். இது போன்ற பல சான்றோர்களுக்கு மத்தியில் வாழும் ஊர் எனது. அதனால் என் தலை நரைக்கவில்லை!"
இன்று கடைக்குப் போய் வண்ணம் வாங்கிக் கொண்டு வந்து தீட்டிக் கொண்டால் தீர்ந்தது பிரச்சினை! மற்றதையெல்லாம் எதிர்பார்த்தால் இன்னமும் தலை வெளுத்துப் போகும் ஐயா!!
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search