Tamil
QoTD
சமூக ஊடகம் (Social Media)
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
அக்டோபர் 9, 2010 - விகடனில் பயனுள்ள கட்டுரைகள் எழுதுகிறார்கள். வருங்காலத் தொழில் நுட்பம் என்ற பகுதியில் சமூக ஊடகம் பற்றிய ஒரு எளிய கட்டுரை கருத்தைக் கவர்ந்தது. இதை விகடன்.காம் இணைய தளத்தில் காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டியிருப்பதால் உரலியை (URL) இங்கே இணைக்க இயலவில்லை. அச்சுப் பதிப்பில் படிப்பவர்கள் படிக்கலாம்.
தகவல்களை (Content) மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதிமுக்கியத் தகவல்கள் (Premium Content), பயனர் ஆக்கித் தரும் தகவல்கள் (User Generated Content) என்பவை முதல் இரண்டு வகை. மூன்றாம் வகை முதல் இரண்டும் சேர்ந்த கலவை. அதிமுக்கியத் தகவல்களில் பயனர்கள் பின்னூட்டம் இடும் போது தகவல்கள் மூன்றாம் வகையாக சுவாரசியம் கூட்டப் பெற்று உருப் பெறுகின்றன.
பயனர்களையும் வகைப் படுத்தலாம். தகவல் உருவாக்கிப் பங்களிப்பவர்கள், தகவல்களைப் படித்துக் கருத்துச் சொல்பவர்கள், டைம் பாஸ் செய்ய தகவல்களைப் படித்து விட்டுச் செல்பவர்கள் என்பவை அவர்கள் வகைகள். பின் இரண்டு வகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருக்க, தகவல் உருவாக்கிப் பங்களிப்பவர்கள் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து கொண்டே போகிறதாம்.
ஃபேஸ்புக்கில் ஒரு குறுகுறுப்பில் கணக்குத் தொடங்கி விட்டுப் பின்னர் அந்தப் பக்கமே போகாத பலரும், ஒரு பெரிய நண்பர்கள் வலையை உருவாக்கி விட்டு, அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் ஃபேஸ்புக்கின் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களில் அடக்கம். ட்விட்டரிலும் இதே கதைதான்.
ஆனால் விளம்பரத் தொழிலில் இருப்பவர்கள், சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்வதைக் கற்றுத் தெளிவதில் மிகவும் சிரத்தை காட்டுகிறார்கள். ஏனென்றால் அடுத்த தலைமுறை தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் நேரத்தை விட கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கும் நேரம் சுமார் மூன்று மடங்கு அதிகம்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search