Tamil
QoTD
சென்னையில் செம்மொழிப் பூங்கா
Udayakumar Nalinasekaren
Dec 20, 2010
நவம்பர் 28, 2010 - அமெரிக்கத் தூதரகத்திற்கு நேர் எதிரே, சென்னை மாநகரத்தின் நடு மத்தியில் தமிழ்ப் பூங்கா ஒன்று திறந்திருக்கிறார்கள். பெயர் செம்மொழிப் பூங்கா. முற்காலத்தில் ஒரு பெயர் பெற்ற ட்ரைவ்-இன் உணவு விடுதி இயங்கிய இடம்.
இரண்டு நாள் முன்னதாகத் திறக்கப் பட்ட இந்தப் பூங்காவில் நேற்று மாலை அலை மோதும் மக்கள் கூட்டம். நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. பூங்காவில், நீர் குளங்கள், திறந்த வெளி அரங்கம் (ampitheatre), நீரோடை, போன்ஸாய் (bonsai) மரங்கள், நறுமண மலர் (aroma garden) தோட்டம், கஸீபோ (gazebo) என்று நன்றாக வடிவமைத்திருக்கிறார்கள். செயற்கை நீருற்றுக்கள் (fountains) சிறப்பாக அமைக்கப் பெற்று ஒளி அமைப்பால் மெருகூட்டப் பெற்றிருக்கின்றன.
முகப்பில் பெயர் பலகையில் தமிழகத்தின் தற்போதைய முதல்வரின் கையெழுத்தை எழுத்துருவாக்கிப் (font) பெயர் பொறித்திருக்கிறார்கள்.
சீருந்து மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்தப் போதுமான இடமில்லாமல், தெருவில் பல வாகனங்கள் நிறுத்தப் பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பூங்காவிற்குள் சாலையில் வாகனங்கள் போடும் இரைச்சல், மக்கள் கூட்டத்தின் இரைச்சலுடன் சேர்ந்து கொண்டு பூங்காவிற்குள் இருக்கிறோம் என்ற எண்ணத்தை முயற்சித்து வரவழைத்துக் கொள்ள வைத்தது.
இன்னமும் நிலக்கடலை, குதி சோளம் (pop corn), மிளகாய் பஜ்ஜி, டில்லி அப்பளக் காரர்கள் அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரே நடைபாதையில் கடை போடவில்லை. அவர்கள் 'ராஜா'க்கள். கூடிய சீக்கிரம் போட்டுவிடுவார்கள். விசாவிற்கு வரிசையில் நிற்பவர்களுக்குக் கூட இந்தப் பூங்கா டைம் பாஸ் ஆக அமையக் கூடும்.
சென்னைக்கு இந்தப் பூங்கா நல்வரவு. சென்னைவாசிகள் இதை நன்றாகப் பராமரிக்க உதவுவார்கள் என்று வாழ்த்துவோம்.
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search