Tamil
QoTD
ஐம்புலன் அடக்குதல்
Udayakumar Nalinasekaren
Jan 18, 2011
திருமூலரின் திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல்
திருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில் நுட்பமான பொருள் பதிந்த கருத்துக்களை எளிய நடையில் சொன்னவர். ஐம்புலன்களை அடக்குவதால் உண்டாகும் நன்மை பற்றி அவர் பாடியிருக்கிறார்.
பல பேர் தனக்குள்ளே கவனம் செலுத்தாமல் புறத்தே கவனம் செலுத்துகிறார்கள். அகத்தைப் பார்ப்பவர் தனக்குள்ளே பால் சொரியக்கூடிய பசுக்களைப் போல ஐந்து புலன்கள் கேட்பாரின்றி மேய்ந்து கொண்டிருப்பதை அறிந்து கொள்வார்கள். அந்தக் கட்டுப்பாடு இல்லாத ஐந்து புலன்களாகிய உணர்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், காணுதல் என்ற பசுக்களால் மனம் பயனில்லாமல் தறி கெட்டுத் வெறி கொண்டு திரிவதை உணர்ந்து கொள்வார்கள்.
அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்து அவற்றின் வெறியையும் அடக்கினால் அந்தப் பசுக்கள் ஞானப்பால் சொரியும், பொல்லாதவையாக வாழ்க்கையில் தோன்றிய பல நல்லவையாக மாறும் விந்தையும் நிகழும்.
திருமந்திரப் பாடல் கீழே:
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே!
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search