Tamil
QoTD
அடுத்தவருக்கு உதவுவோம்!
Udayakumar Nalinasekaren
Sep 14, 2014
ஒரு பெரிய பயிற்சி வகுப்பில் மனித வள மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது பேச்சாளர் செய்திகளை ஆழமாகப் பதியச் செய்வதில் வல்லவர். பயிற்சி பெறுபவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரே வண்ணமுள்ள ஒர் பலூன் கொடுத்து அதில் அவரவர் பெயரை எழுதச் சொன்னார்.
எல்லோரும் அந்த வேலையைச் செய்து முடித்த உடன் பக்கத்தில் இருந்த காலி அறையில் அந்த பலூன்களைத் தரையில் விட்டு வரச் சொன்னார். அவர்கள் விட்டு விட்டு வந்து வேறு சில தலைப்புகளில் கவனம் செலுத்தினர்.
சிறிது நேரம் போனது. பேச்சாளர் இப்போது எல்லோரையும் பக்கத்து அறைக்குப் போய் தம் பெயர் எழுதிய பலூனைக் கண்டுபிடித்து எடுத்து வரச் சொன்னார். எல்லோரும் பக்கத்து அறைக்குப் போய் தேடஆரம்பித்தனர். பல நிமிடங்கள் கடந்த பின்னரும் ஒருவராலும் தம் பெயர் எழுதிய பலூனைக் கண்டு பிடிக்க இயலவில்லை. எல்லா பலூனும் ஒன்றே போல் இருந்ததால் குழப்பம்.
பேச்சாளர் எல்லோரையும் திரும்பக் கூப்பிட்டார். செய்முறையை சற்று மாற்றச் சொன்னார். மறுபடியும் எல்லோரும் பக்கத்து அறைக்குப் போக வேண்டும். கையில் கிடைக்கும் ஒரு பலூனை எடுத்து அதில் எழுதியிருக்கும் பெயரைப் படித்து உரியவரைக் கண்டுபிடித்து அவரிடம் சேர்த்து விட வேண்டும். இதுவே புதிதாக அவர் சொன்ன செய்முறை.
இதை நடைமுறைப் படுத்தும் போது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் ஒவ்வோருவருக்கும் கிடைத்து விட்டது. இதை வாழ்க்கையின் முக்கியமான தத்துவமாகப் பேச்சாளர் எடுத்துச் சொன்னார். "தனக்கான மகிழ்ச்சியைத் தேடுவதை விட்டு அடுத்தவர் மகிழ்ச்சிக்கு உதவினால், நம் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்".
My Artwork
Coming soon...Latest Blog Posts
Coming Soon
Archives
Search